உலர் திராட்சையில் நமது உடலுக்கு தேவையான பல எண்ணற்ற மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. மேலும் இது நமது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்படுகிறது. உளர் திராட்சையில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
உலர்திராட்சையில் போலிக் அமிலம்,மெக்னீசியம், இரும்பு சத்து, வைட்டமின் பி மற்றும் பல சத்துக்களையும் கொண்டுள்ளது.
சிறுநீரகத்தில் ஏதேனும் நோய் தொற்றுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்ய 8-10 உலர் திராட்சையை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து அதனை காலையில் உட்கொண்டு வந்தால் சிறு நீரகத்தில் இருக்கும் பிரச்சனைகளை உதவு கிறது.
உலர்திராட்சையை நீரில் கொதிக்க வைத்து அதனை அருந்தி வந்தால் குடற்புண்களை குணப்படுத்த பயன் படுகிறது.
உடலில் வெப்பநிலை அதிகம் உள்ளவர்கள் தினமும் உலர்திராட்சையை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து நாள் முழுவதும் அந்த நீரை அருந்தி விட்டு உலர்திராட்சைகளை சாப்பிட்டு வந்தால் உடற் சூடு நீங்கி உடல் குளிர்ச்சி அடையும்.
இதய துடிப்புகள் சீராக இல்லாதவர்கள் பாலில் உலர் திராட்சைகளை போட்டு கொதிக்க வைத்து அதனை குடித்து வர இதய துடிப்புகள் சீராக இருக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக படியான வயிற்று வலி மற்றும் இரத்த போக்கை கட்டுப்படுத்த உலர்திராட்சைகளை நீருடன் சேர்த்து எடுத்து வந்தால் மிகவும் நல்லது.
தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு 5-6 உலர்திராட்சையை பாலில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் மிகவும் நல்லது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…