Nuts
Nuts-கொழுப்புச்சத்து நிறைந்துள்ள பருப்பு வகைகளை ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இங்கே காணலாம்.
என்னதான் நட்ஸில் நல்ல கொழுப்பு இருந்தாலும் அது உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்தும்.
நட்ஸ் வகைகளை ஒரு நாளைக்கு 30 கிராம் அளவு எடுத்துக் கொள்வது போதுமானது அதிலும் எண்ணெய் மற்றும் நெய்யை அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் 30 கிராமை விட குறைவாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.பொதுவாகவே நட்ஸ் வகைகள் மூளை வளர்ச்சிக்கும், நரம்புகள் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது .
வேர்க்கடலை நமக்கு எளிதில் கிடைக்கக்கூடியது . இதில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், கோலின், புரதம் ,கொழுப்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது .இது மூளை வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் .
வளரும் குழந்தைகள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் ,கர்ப்பிணி பெண்கள் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்வது நல்லது. வேர்க்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ எடுத்துக் கொள்ளலாம் பச்சையாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
பாதாம் பருப்பு கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடியது. தினமும் 5 பாதாம் பருப்புகள் எடுத்துக் கொள்வதே போதுமானதாகும்.சருமத்தை பொலிவாகவும் அழகாகவும் வைத்து கொள்ளும் .
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம் .சர்க்கரை நோயாளிகள் இரண்டு பாதாம் பருப்பை ஊறவைத்து பிறகு எடுத்துக் கொள்ளவும்.
முந்திரி பருப்பில் விட்டமின்கள், தாதுக்கள் ,கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது .இதை உடல் எடை குறைவாக இருப்பவர்கள் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு பருப்புகள் எடுத்துக் கொள்ளலாம். இதில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளதால் உடல் பருமன் உள்ளவர்களும் இதய நோயாளிகளும் தவிர்க்க வேண்டும்.
பிஸ்தா சரும நோய்களை வராமல் தடுக்க கூடியது.சருமத்திற்கு பளபளப்பை தரும் . இதில் கால்சியம் மற்றும் தாதுக்கள், புரதம் அதிகம் உள்ளது .கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து நான்கு பருப்புகள் எடுத்துக் கொள்ளலாம்.
இதில் மீன்களைப் போலவே ஒமேகா 3 அமினோ அமிலம் அதிகம் உள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .ரத்தம் உறைதலை தடுக்கும் தன்மையும் கொண்டது.
இதய நோயாளிகள் ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று வீதம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக் கொள்வது சிறந்தது.
இது போன்ற நட்ஸ் வகைகளில் கொழுப்புகள் அதிகம் இருப்பதால் ஒரு நாளைக்கு தேவையானவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் .அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…