மோரில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? வாங்க பார்ப்போம்!

பலருக்கு மோரில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்று தெரியாது. தற்போது இந்த பதிவில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்று பார்ப்போம்.
நம்மில் பெரியவர்கள் வரை அனைவருமே மோர் என்றாலே விரும்பி குடிப்பதுண்டு. ஆனால் பலருக்கு இதில் என்னென்ன மருத்துவ குணங்கள் என்பது பற்றி தெரியாது. தற்போது இந்த பதிவில், மோரில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்று பார்ப்போம்.
நெஞ்செரிச்சல்
நம்மில் பலருக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் மோரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
செரிமானம்
நம்மில் அதிகமானோர் காரசாரமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்கள் சாப்பிட்ட உடன், ஒரு கிளாஸ் மோர் குடிப்பது நல்லது. மேலும், செரிமான பிரச்சனை உள்ளவர்களும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி
நம்மில் பலருக்கும் பல விதமான நோய்கள் ஏற்படுவதற்கு காரணம் நமது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதது தான். இவ்வாறு அடிக்கடி உடலில் ஏதாவது பிரச்னை ஏற்படுபவர்கள், மோர் குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
இரத்தம்
அடிக்கடி மோர் குடிப்பதால், இரத்தம் சீராஐ உதவுவதோடு, உடலில் தேவையற்ற கொழுப்புகள் உருவாகுவதை தடுக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025