இன்று இந்திய -ஆஸ்திரேலிய முதல் டெஸ்ட் போட்டி..!

The first match of the four-match Test series between the two teams takes place today as a day-night match at the Adelaide Stadium.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த தொடருக்கான 2 பயிற்சி போட்டிகளும் டிராவில் முடிந்தன. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்விற்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும், நாளைய போட்டியில் அவர் பங்கேற்பார் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவும் கைப்பற்றியது. அடிலெய்டு மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.