ஜாதிக்காயின் வியக்க வைக்கும் மருத்துவ நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

Published by
K Palaniammal

ஜாதிக்காய் -ஜாதிக்காயின் மருத்துவ பண்புகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜாதிக்காயின் நன்மைகள்:

ஜாதிக்காய் பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆக்சிடேட்டிவ் டிரஸை  குறைக்கக்கூடியது. இது கேபிக் ஆசிட், டெர்பின்ஸ் , சைனைட்டின்,பெருலிக் ஆசிட், பினைல் ப்ரோபடான்ஸ்   போன்றவை இருப்பதால் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது .

மேலும் உடலில் உள்ள வீக்க அணுக்கள் ,அலர்ஜி ,மூட்டு வலி போன்றவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. கணையம் புத்துணர்ச்சி பெறவும் உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்கப்படுகிறது.

யுசினால்  என்ற வேதிப்பொருள் இயற்கையாகவே அமைந்துள்ளதால் பல் ஈறு பிரச்சனை ,சொத்தைப்பல், பல் வலி, வாய் துர்நாற்றம் போன்றவற்றை குணப்படுத்துகிறது. மேலும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கவும் செய்கிறது  இதனால்தான் டூத் பேஸ்ட்களில் ஜாதிக்காய் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.

பெண்களின்  கருப்பை தசைகளை வலுவடைய செய்கிறது, கருப்பைக்கு நல்ல ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது .ஆண்மை குறைபாடையும் நீக்குகிறது .விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரித்து விந்தணுக்களை தரமானதாகவும் இருக்க உதவி செய்கிறது.

மலட்டுத்தன்மை நீங்க பாலில் கால் ஸ்பூன் ஜாதிக்காய் பவுடரை கலந்து  இரவு உணவுக்கு பிறகு தொடர்ந்து ஒரு மாதங்கள் எடுத்துக் கொள்ளவும். ஒரு மாதத்திற்கு மேல் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு பயன்படுத்தவும்.

இதில் மெக்னீசியம் காப்பர் ,பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. வெந்நீரில் பத்து நாட்களுக்கு ஒரு முறை ஜாதிக்காய் பவுடரை குறிப்பிட்டுள்ள அளவு  கலந்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுவதோடு சருமம் பளபளப்பு அதிகரிக்கும் .

மேலும் நுரையீரல் தொற்று ,காசநோய், ஆஸ்துமா போன்றவை குணமாக தேனில் ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடி மற்றும் மூன்று ஸ்பின்ச் ஜாதிக்காய்  பவுடர் கலந்து எடுத்துக் கொண்டால் படிப்படியாக குணமாகிவிடும்.

இந்த ஜாதிக்காயை போன்று ஜாதி பத்திரியும்  பல்வேறு மருத்துவ குணம் உள்ளது ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு ஜாதி பத்திரி சேர்த்து அந்த தண்ணீரை நாள் முழுவதும் குடித்து  கொள்ளலாம் .இவ்வாறு வாரத்திற்கு இரண்டு நாட்கள் செய்தால் போதும் இதனால் தேவையில்லாத டென்ஷன் குறைக்கப்படுகிறது. நல்ல தூக்கத்தை கொடுக்கிறது, மன அழுத்தம் குறைகிறது.

பக்க விளைவுகள்:

ஜாதிக்காய் பொடியை 4 கிராமுக்கு மேல் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இதில் உள்ள மெரிஸ்டிஸின்  என்ற எண்ணெயானது  நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்குகிறது. இதனால் மனம் சார்ந்த சில பிரச்சனைகளை ஏற்படுகிறது.

அதாவது  வானத்தில் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது .இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல் கற்பனை செய்யும் உணர்வுகளை அதிகப்படுத்துகிறது. இதற்கு ஹலுக்சினேஷன் என்று பெயர் உள்ளது.

அதனால் குறிப்பிட்ட அளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் என்றால் இரண்டு கிராம் அளவும், ஆண்கள் என்றால் 4 கிராம் அளவும், குழந்தைகள் என்றால் ஒரு ஸ்பின்ச்  எடுத்துக் கொள்ளலாம்.

எனவே ஜாதிக்காயின் மருத்துவ நன்மைகளை பெற வேண்டும் என்றால் அதை அளவோடு பயன்படுத்தி அதன் பலன்களை  பெறுங்கள்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

10 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

11 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

13 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

13 hours ago