blood [Imagesource : Representative]
நமது உடலில் ரத்தத்தை சுத்திகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த மூன்று பொருட்களை சாப்பிடலாம்.
நமது உடல் உறுப்புகளின் சீரான மற்றும் ஆரோக்கியமான இயக்கத்திற்கு ரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ரத்தம் சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியமானதாகும். ரத்தத்தில் சுத்தம் இல்லை என்றால், மனித உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அந்த வகையில் நமது உடலில் ரத்தத்தை சுத்திகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த மூன்று பொருட்களை சாப்பிடலாம்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. இது ரத்தத்தில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதுடன் ரத்தத்தில் உள்ள தேவையில்லாத அழுக்குகளை நீக்குகிறது. மேலும் அடிக்கடி பீட்ரூட் சாப்பிடுபவர்களுக்கு இரத்த பற்றாக்குறை ஏற்படாது. இதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு நமது உடலில் ஓடும் ரத்தமும் சுத்தமாக இருக்கும்.
மாதுளை
மாதுளை பழத்தை சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், ரத்த சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரும்பாலும் மருத்துவர்கள் அடிக்கடி சாப்பிட சொல்லும் பழங்களில் ஒன்று மாதுளை.இது நமது உடலில் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் ரத்த சிவப்பணுக்களையும் அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேறுகிறது. நமது உடலில் ரத்த ஓட்டத்தையும் சீராக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கீரைகள்
கீரைகளைப் பொறுத்தவரையில் பலவகையான கீரையில் உள்ளது. எல்லா கீரைகளிலும் ஏதாவது ஒரு வகை சத்துக்கள் காணப்படுகிறது. பொதுவாக கீரைகளை பொறுத்தவரையில், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக காணப்படும்.
எனவே அடிக்கடி உணவில் கீரை சேர்த்துக் கொள்ளும் போது, உணவில் ரத்த ஓட்டமும் சீராக காணப்படுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ரத்தம் சம்பந்தமான நோய்கள் நமது உடலில் ஏற்படாமல் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ உதவுகிறது.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…