கிராமத்து ஸ்டைலில் இறால் தொக்கு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

Published by
K Palaniammal

Chennai -கடல் உணவுகளில் ஒன்றானது தான் இறால். இதை எப்படி செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடும் இறால் பிரியர்கள் ஏராளம் .இறாலில் அதிக அளவு வைட்டமின் டி சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த அசைவ உணவை தேர்வு செய்யலாம்.

கிராமத்து ஸ்டைலில் இறால் செய்யும் முறை;

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்;

  • இறால் =அரை கிலோ
  • இஞ்சி= ஒரு துண்டு
  • பூண்டு =15 பள்ளு
  • சின்ன வெங்காயம் =ஐந்து
  • மிளகு ஒரு ஸ்பூன்
  • சீரகம் =அரை ஸ்பூன்
  • சோம்பு= ஒரு  ஸ்பூன்

தாளிக்க தேவையானவை ;

  • எண்ணெய் = நான்கு ஸ்பூன்
  • பெரிய வெங்காயம்= 2
  • தக்காளி= 2
  • பச்சை மிளகாய்= 2

மசாலா பொடிகள் ;

  • மல்லித்தூள் =ஒரு ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள்=சிறிதளவு

செய்முறை;

முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ,மிளகு, சீரகம் மற்றும் அரை ஸ்பூன் சோம்பை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிந்ததும் பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அதன் பச்சை வாசனை போன பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி விடவும். தக்காளி வதங்கியதும் மசாலா பொடிகளை சேர்த்து கிளறிவிட்டு அதிலே இறாலையும் சேர்த்து கலந்து விடவும். இறால் மூழ்கும் அளவு தண்ணீர்  ஊற்றி  உப்பும் சேர்த்து இறாலை வேக வைக்கவும். இறால் வெந்த பிறகு கலந்துவிட்டு தண்ணீர் வற்றி எண்ணெய்   பிரிந்து வரும் சமயத்தில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் நாவூரும்  சுவையில் இறால் தொக்கு ரெடி..

Recent Posts

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…

28 minutes ago

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

1 hour ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

3 hours ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

3 hours ago

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி விஜய் அரசியல் செய்யணும்- ரோஜா அட்வைஸ்!

திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…

4 hours ago

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…

5 hours ago