லைஃப்ஸ்டைல்

சேப்பங்கிழங்கை வைத்து வீட்டிலேயே மொறு மொறு சிப்ஸ் செய்வது எப்படி..?

Published by
லீனா

நம்மில் பெரும்பாலானோர் கடைகளில் பல வகையான இனிப்பு, கார உணவுவகைகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. அதிலும் சிப்ஸ் வகைகளை அனைவருமே விரும்பி சாப்பிடுவர். பொதுவாக கடைகளில் உருளை கிழங்கு சிப்ஸ், நேந்திரம் பழ சிப்ஸ் போன்றவை கிடைக்கும். அந்த வகையில், சேப்பங்கிழங்கு சிப்ஸ் சுவையாக இருக்கும்.

சேப்பங்கிழங்கை வைத்து செய்யக்கூடிய சிப்ஸ் மிகவும் சுவையாக இருப்பதுடன், மொறு, மொறுவென நாம் சலிக்காமல் சாப்பிடும் அளவிற்க்கு நமக்கு பிடித்தவாறும் இருக்கும். இந்த சிப்ஸ்களை கடையில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். கடையில் அதிக விலை கொடுத்து வாங்குவதை விட, குறைந்த செலவிலேயே வீட்டில் செய்து சாப்பிடலாம்.

இந்த சிப்ஸை நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடும் போது நமக்கு தேவையான அளவு சிப்ஸ் செய்வதுடன், சுகாதாரமாகவும் செய்யலாம். இந்த சேப்பங்கிழங்கில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றலும் உள்ளது.

சேப்பங்கிழங்கின் நன்மைகள்

சேப்பங்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் E, கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கலோரிகள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கார்போஹட்ரேட் போன்ற அனைத்து சத்துக்களும் இருக்கிறது.

சேப்பங்கிழங்கில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மலசிக்கல் மற்றும் செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த கிழங்கு மிகவும் நல்லது. இந்த கிழங்கில் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுவதோடு, சரும பிரச்சனையை போக்கவும் உதவுகிறது.

சேப்பங்கிழங்கு வறுவல் செய்ய தேவையானவை :

  • சேப்பங்கிழங்கு – 3
  • காய்ந்த மிளகாய் – 5
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • பூண்டு – 5 பல்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கடுகு – கால் ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
  • சீரகம் – கால் ஸ்பூன்
  • மிளகு தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் சேப்பக்கிழங்கை மெல்லியதாக வட்டமாக வெட்டி கொள்ள வேண்டும் அல்லது நாம் கிழங்கு சீவும் கருவி மூலம் மெல்லியதாக சீவிக் கொள்ளலாம். பின் அதனை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் கொதித்த பின், பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் மிக்ஸியில் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், பூண்டு ஐந்து பல், எண்ணெய் இரண்டு ஸ்பூன், சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதனுள் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், தேவையான அளவு உப்பு மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள கலவை ஆகியவற்றை கலந்து சற்று பச்சை வாசனை போகும்வரை கிளறி விட வேண்டும்.

அதன் பின் பொரித்து வைத்துள்ள சேப்பக்கிழங்கு வறுவலை எடுத்து, அதனுள் போட்டு நன்கு கிழங்கில் கலவை படுமாறு கிளறி கொள்ள வேண்டும். இறுதியில் சிறிதளவு மிளகுத்தூள் தூவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்த சிப்ஸை சாதத்துடனும் சாப்பிடலாம்.

Published by
லீனா

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

4 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

4 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

4 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

6 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

6 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

6 hours ago