சத்தான சோள இட்லி செய்வது எப்படி?

நாம் காலையில் உண்ண கூடிய சத்தான சோள இட்லி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- சோளம் – மூன்றரை கப்
- உளுந்து – ஒரு கப்
- வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
- சாதம் – 4 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சோளத்தை 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவேண்டும். ஊறியதும் உளுந்தையும், சோளத்தையும் தனித்தனியாக அரைத்து கொள்ளவேண்டும்.
உளுந்து அரைக்கும் போது அத்துடன் சாதத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த கலவையுடன் உப்பு சேர்த்து கைகளால் நன்கு கலந்துவிட்டு 8 மணி நேரம் புளிக்க விடவேண்டும். பின்பு ஒரு கரண்டியால் கலந்து விட்டு இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது சத்தான சுவையான இட்லி தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025