கோடை காலங்களில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி?

Published by
K Palaniammal

Child care tips-கோடை காலங்களில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்று இப்பதிவில் காண்போம்.

நீர்;

‘ நீரின்றி அமையாது உலகு’ என்று ஒரு பழமொழியே உள்ளது. அதற்கேற்ப கோடை காலத்தில் நீர் மிகவும் அவசியமாக உள்ளது. அதேபோன்று கோடை காலங்களில் தான் நீர் இழப்பு என்பதும் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு போதுமான அளவு நீர் அருந்துவது மிகவும் நல்லது.

தோல் பராமரிப்பு;

முதலில் குழந்தைகளை ஒன்று அல்லது இரண்டு முறை குளிக்க வைக்க வேண்டும், எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பது மிகவும் நல்லது, அதிலும் நல்லெண்ணெய் ,விளக்கெண்ணெய் போன்ற குளிர்ச்சி தரக்கூடிய எண்ணெய்களை பயன்படுத்தலாம்.

கடுகு எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. இப்படி குளிக்கும் போது எண்ணெய்   சோப்புடன் சேர்ந்து ஒரு பிசுபிசுப்பு தன்மை ஏற்படும். அதனை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். இல்லை என்றால் உடம்பில் மடிப்பு உள்ள இடங்களில் படிந்து வியர் குறு வர வாய்ப்பு உள்ளது.

வியர்க்குரு;

கோடைகாலங்களில் அதிகம் வியர்ப்பதால் வியர்குரு  குழந்தைகளுக்கு வருவதுண்டு. அதற்கு பவுடர் அடிப்பதால் வியர்குரு  வராது என்று நினைத்து பவுடர் அடிக்கிறார்கள். பவுடர் அடிப்பதனால் வியர்வை துவாரங்கள் அடைக்கப்படும். அதனால் பவுடர் அடிப்பது அவ்வளவு நல்லதல்ல.

இதற்கு பதிலாக சந்தனம் உடல் முழுவதும் பூசி பிறகு குளிக்க வைப்பது நல்லது .குளிக்கும் நீரில் வேப்பிலை போட்டு ஒரு 15 நிமிடம் கழித்து குளிக்க வைத்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும். வேப்பிலை ஒரு ஆன்ட்டி மைக்ரோபியல் ஆகும் .வியர்க்குரு உள்ள இடங்களில் கற்றாழை ஜெல் தடவி வந்தால் வியர்க்குரு மறையும்.

ஆடைகள்;

இந்தக் கோடையில் ஆடையில் அதிகம் அக்கறை கொள்ள வேண்டும். லூசான ஆடைகளை அணிவது நல்லது .காட்டன் ஆடைகள் தான் அணிய வேண்டும் .வெளியில் செல்லும்போது முழு கை டீ சர்ட் ,பேண்ட் போன்று முழுவதும் வெயில் மேலே படாதவாறு போட்டுக் கொள்வது நல்லது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் காலை 6 முதல் ஏழு மணி வரை குழந்தைகளை 15 நிமிடம் வெயிலில் இருந்தால் விட்டமின் டி கிடைக்கும்.

அறை வெப்பநிலை;

அறைகளை எல்லாம் காற்றோட்டமாக வைத்துக் கொள்வது நல்லது .பகல் நேரங்களில் கதவு ஜன்னல்களை மூடி வைக்கவும் ,இதனால் வெப்ப கற்று வீட்டுக்குள் வராமல் தடுக்கப்படும் .இரவில் திறந்து வைத்தால்  மிகவும் காற்றோட்டமாக இருக்கும் .

சிறுநீர்;

கோடை காலங்களில் சிறுநீர் போவது மிகவும் குறையும். 24 மணி நேரத்தில் ஆறு தடவை சிறுநீர் போவது நல்லது. நீர் அதிகமாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது நீரிழப்பு ஏற்படாமல் கொள்ளும்.

உணவு;

உணவுகளில் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் கொடுப்பது நல்லது. காய்கறியில் சௌசௌ,புடலங்காய் பூசணிக்காய் வெள்ளரிக்காய் போன்றது நல்லது.

வெயில் காலங்களில் கிடைக்கக்கூடிய பழங்களான தர்பூசணி, கிர்னி பழம் ,நொங்கு இளநீர், திராட்சை போன்ற நீர்ச்சத்து பழங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

மாம்பழம், அண்ணாச்சி பழம், பலாப்பழம் பப்பாளி பழம் இவைகள் சூடு தரக்கூடிய பழங்கள் ஆகும் .இதனை குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் நல்லது.

குளிர்ச்சி தரக்கூடிய தயிர் சாதம், மோர் போன்றவை கொடுக்கலாம். சிக்கன் , எண்ணெயில் பொரித்த பண்டங்கள் ,காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

சுத்தம்;

கோடை காலங்களில் சுத்தமாக இருப்பது மிகவும் நல்லது. வீட்டை சுத்தமாகவும் வெளியில் சென்று வருபவர்கள் கை கால்களை கழுவி விட்டு வருவது மிகவும் நல்லது.

குழந்தைகள் கை கழுவ வேண்டும் .இதனால் கிருமிகள் பரவுவது குறையும் .சுத்தமாக இல்லை என்றால் சின்னம்மை பெரியம்மை போன்ற நோய்கள் பரவும். இதனால் வீடுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

எனவே பெற்றோர்கள்  கோடையில் குழந்தைகளை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும்  பராமரித்துக் கொள்ள வேண்டும் .

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

7 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

8 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

8 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

9 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

9 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

9 hours ago