உருளைக்கிழங்கு இருந்தா போதும்.. பத்து நிமிஷத்துல லஞ்ச் ரெடி..!

Published by
K Palaniammal

Potato fried rice- உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்;

  • உருளைக்கிழங்கு= 2
  • எண்ணெய்  =ஐந்து ஸ்பூன்
  • கடுகு= ஒரு ஸ்பூன்
  • உளுந்து= அரை ஸ்பூன்
  • சீரகம்= ஒரு ஸ்பூன்
  • வரமிளகாய் =2
  • வெங்காயம்= ஒன்று
  • இஞ்சி =ஒரு துண்டு
  • பூண்டு= எட்டு பள்ளு
  • மஞ்சள் தூள்= அரை ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
  • கரம் மசாலா =ஒரு ஸ்பூன்
  • மல்லித்தூள் =அரை ஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள்= சிறிதளவு
  • சாதம்= மூன்று கப்

செய்முறை;

முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து ,சீரகம் ,சிறிதளவு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இப்போது வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் , பிறகு பூண்டை சிறிது சிறிதாக நறுக்கி சேர்க்கவும் .இஞ்சியையும் தட்டி சேர்த்துக்கொண்டு வதக்கவும்.

உருளைக்கிழங்கையும் சேர்த்து கலந்து வேக விடவும் .வெந்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,  மல்லி தூள், கரம் மசாலா ஆகியவற்றையும் சேர்த்து கலந்துவிட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும் .இரண்டு நிமிடம் கழித்து சாதத்தை சேர்த்து கிளறி விடவும் .இப்போது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் உருளைக்கிழங்கு சாதம் தயாராகிவிடும்.

 

Recent Posts

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

15 minutes ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

15 minutes ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

30 minutes ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

1 hour ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

2 hours ago