பிளாங்க் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க .!

Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் உடற்பயிற்சியை பெரும்பாலானோர் செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு பாகத்திற்கு என்று தனித்தனி பயிற்சிகளும் உள்ளது .ஆனால் ஒட்டுமொத்த உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த பிளாங்க் உடற்பயிற்சி சிறந்த பலனாக இருக்கிறது.
பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் இந்த பிளாங்க் உடற்பயிற்சியை செய்து வந்தால் பல்வேறு நன்மைகளை பெற முடியும். குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இது மிகச் சிறந்த பயிற்சியாக உள்ளது.
சரியான முறையில் இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது தண்டுவடம் நேராக்கப்படுகிறது. கூன் விழுவது தடுக்கப்படுகிறது.
ஒரு நாள் ஒன்றுக்கு மூன்றிலிருந்து ஐந்து வரை கலோரிகள் கரைக்கப்படுகிறது. முதுகு வலி குறையும் ,தொப்பை, தொடை பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைக்கப்படுகிறது.
மேலும் மெட்டபாலிசத்தை சீராக்க உதவுகிறது .உடல் சோர்வு, மன அழுத்தம், மன குழப்பம் போன்றவற்றிற்கு நல்ல தீர்வை கொடுக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தையும் கொடுக்கிறது.
பிளாங்க் உடற்பயிற்சியை செய்யும் சரியான முறை:
பிளாங்க் செய்யும் போது கைகளை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். கிராசாக வைத்துக் கொண்டால் தோள்பட்டையில் வலி ஏற்படும். அதேபோல் முதுகு பகுதி கீழ்நோக்கியும் வயிறு தரையில் தொடும்படி செய்யக்கூடாது. இதனால் முதுகு வலி ஏற்படும்.
முதுகு பகுதி சற்று மேல் நோக்கி உடல் முழுவதும் சமமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் கழுத்துப் பகுதியை மேல்நோக்கி வைக்கும் போது கழுத்து வலி ஏற்படும் ,அதனால் கழுத்தை நேராகவோ அல்லது கீழ் நோக்கியோ வைத்துக் கொள்ளலாம். கால் பகுதியை மிக ஒட்டியும் அகலமாகவும் வைக்காமல் நேராக வைத்துக் கொள்ளவும்.
செய்யக்கூடாதவர்கள்:
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கீழ் முதுகு வலி உள்ளவர்கள், தோள்பட்டை வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி செய்வதை தவிர்க்க வேண்டும்.
எனவே இந்த பிளாங்க் உடற்பயிற்சியை முறையாக செய்து அதன் முழு பலனையும் பெறுங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
February 17, 2025
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!
February 17, 2025
வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
February 17, 2025
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் – மூன்றாவது விமானம் இந்தியா வந்தடைந்தது.!
February 17, 2025
ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் அட்டவணை இதோ!
February 17, 2025