இந்த பூவை வைத்து தோசை சுடலாமாம்..! இதை அப்படி என்ன நன்மை உள்ளது..?

Hibiscus

பொதுவாகவே பூ என்றாலே நாம் அதனை ஒரு அலங்கார பொருளாக தான் பார்ப்பதுண்டு. ஆனால், செம்பருத்தி பூவை பொறுத்தவரையில், இதனை அழகுக்காக மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு பூவாக கூட பார்க்கலாம். தற்போது இந்த பதிவில் செம்பருத்தி பூவை வைத்து தோசை சுடும் முறை மற்றும் இந்த பூவின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

செம்பருத்தி தோசை 

நாம் நமது வீடுகளில் பலவகையான தோசைகளை செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், செம்பருத்தி தோசை குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரிவித்தில்லை.

தேவையானவை 

  • தோசைமாவு – 3 கப்
  • செம்பருத்தி பூ – 20
  • சின்ன வெங்காயம் – 4
  •  சீரகம் – சிரித்தவு
  • உப்பு – தேவையான  அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு  எடுத்து வைத்துள்ள செம்பருத்திப் பூவின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து நன்கு கழுவிஎடுத்து, அதனை மிக்ஸில் போட்டு சின்ன வெங்காயம், சீரகம், உப்பு, ஒரு கப் தோசை மாவு சேர்த்து மை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அரைத்து வைத்துள்ள கலவையை மீதமுள்ள தோசை மாவில்  கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் தடவி சூடேறியதும், அதில் தோசையை  மெல்லியதாக போட்டு அதன் மேல் சிறிய வெங்காயம் நறுக்கியது மற்றும் கொத்தமல்லி தழைகளை தூவி சுட்டு எடுத்தால் சுவையான செம்பருத்தி தோசை தயார்.

செம்பருத்தி பூவின் நன்மைகள் 

செம்பருத்தி பூவை பொறுத்தவரையில், அதில் நமது உச்சந்தலை முதல் பாதம் வரை பல்வேறு நன்மைகளை அளிக்கும் ஆற்றல் உள்ளது. இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், இது இரத்த அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் இந்த பூவை உணவில் சேர்த்தால், இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை போக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று சர்க்கரை நோய். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூ ஒரு சிறந்த மருந்தாகும். இந்த பூவை உணவில் சேர்ப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துதுகிறது.

மேலும், இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன.  இது நமது உடலில்  பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. எனவே மிகவும் எளிதாக கிடைக்க கூடிய இந்த செம்பருத்தி பூவை நாம் உணவில் சேர்த்து ஆரோக்கியத்தை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்