லைஃப்ஸ்டைல்

தீபாவளிக்கு மொறு மொறுனு ஒரு ரெசிபி..! இதோ உங்களுக்காக..!

Published by
லீனா

பொதுவாக நமக்கு தீபாவளி என்றாலே நமது வீடுகளில் கொண்டாட்டமாக தான் இருக்கும். அதில் முக்கிய பங்கை வகிப்பது பலகாரம் தான். அந்த வகையில் நாம் நமது வீடுகளில் பல வகையான உணவுகளை செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய எள்ளு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • பொட்டுக்கடலை பொடி – 2 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு – 1 கப்
  • உளுந்து மாவு – கால் கப்
  • கருப்பு எள்ளு – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பெருங்காய தூள் – சிறிதளவு
  • உருக்கிய வெண்ணெய் –  1 ஸ்பூன்

செய்முறை 

முதலில் எள்ளு முறுக்கு செய்ய தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடி கனமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை பொடி, அரிசி மாவு, உளுந்து மாவு, கருப்பு எள்ளு, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள், உருக்கிய வெண்ணெய் இவை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து ரொட்டி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிசைந்த மாவை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அதன்பின் முறுக்கு செய்ய தொடங்க வேண்டும்.

எண்ணெய் சூடு ஏறிய பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் நமக்கு தேவையான வடிவத்தில் பிழிந்து எடுத்து, கொதித்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய எள்ளும் முறுக்கு தயார்.

இந்த முறுக்கை நாம் செய்து வைத்து, இரண்டு வாரங்கள் வரை வேண்டுமானாலும் வைத்திருந்து சாப்பிடலாம். கடைகளில் நாம் வாங்குவதை விட வீட்டில் செய்யும்போது அது சுத்தமானதாக காணப்படுவதோடு. நாம் திருப்தியாக சாப்பிடக்கூடிய வண்ணம் நமக்கு தேவையான அளவு செய்து கொள்ளலாம், செலவு மிச்சமாகும்.

எள்ளின் நன்மைகள் 

எள்ளில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கிறது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நார்சத்து, பசி உணர்வை குறைக்க உதவுவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.

Published by
லீனா

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

28 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

54 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

2 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago