லைஃப்ஸ்டைல்

மக்களே..! இனிமேல் இந்த பழத்தின் தோலை தூக்கி எறியாதீர்கள்..!

Published by
லீனா

மாதுளை பழத்தை சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவர். இந்த பழத்தை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். மாதுளை பழத்தில் பல வகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதேபோல் மாதுளை பழத்தின் தோலிலும் அதிகமான சத்துக்கள் உள்ளது.

நமது வீடுகளில் மாதுளை பழத்தை சாப்பிட்ட பின் அதன் தோல்களை உபயோகமற்றது போல தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் இந்த பழத்தின் தோல்களில் பலவகையான நன்மைகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் மாதுளை பழத்தூரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

பற்களின் ஆரோக்கியம் 

mouth [Imagesource : Indianexpress]
நாம் பயன்படுத்தும் பல்பொடிகள் மற்றும் பேஸ்டுகளில் மாதுளை தோல் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஏனென்றால் மாதுளையின் தோல் வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாதுளை தோலை காயவைத்து அதனை தூளாக்கி அதனை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, உங்கள் பற்களின் ஆரோக்கியத்தையும் அது பாதுகாக்கிறது.

சரும ஆரோக்கியம் 

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் நமது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வகையான கெமிக்கல் கலந்த கிரீம்கள் மற்றும் பொருட்களை உபயோகிக்கிறோம். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. ஆனால் நாம் இயற்கையான முறையில் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளும் நமக்கு பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை.

facebeauty [Imagesource – Representative]
அந்த வகையில் மாதுளை பழ தோல் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய வைக்கிறது. மாதுளை பழத்தோலை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தினால், உங்கள் சருமம் இளமையாகவும் பொலிவுடன் காணப்படும்.  மாதுளை தோலில் ஆன்டிவைரல், ஆன்டிபாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் உள்ளன. தோலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது.

எலும்புகளின் ஆரோக்கியம் 

pain [Imagesource : Representative]
நமது உடலில் உள்ள எலும்புகளில் ஏதாவது ஒரு எலும்பு பாதிக்கப்பட்டாலும் நமது உடல் ஆரோக்கியம் தடைபடும். அந்த வகையில் நமது எலும்புகளை வலுப்படுத்துவதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும்  பயன்படுகிறது. மாதுளை தோலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு குணங்கள் காணப்படுகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு மாதுளை பழத்தின் தோளிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை  அல்லது உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால் நமது எலும்புகள் உறுதியடைவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

முடி பிரச்சனை 

hairoil [Imagesource : Timesofindia]
பெண்களுக்கு அழகே அவர்களின் முடி தான். அந்த வகையில், முடியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மாதுளை தோல் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதுளை தோலைப் பொடி செய்து, நீங்கள் தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன் சேர்த்து தேய்த்தால், பொடுகுத் தொல்லையைத் தடுக்கவும், முடி உதிர்தலுக்கு எதிராகவும் செயல்படும். இதனை இரண்டு மணி நேரம் தேய்த்து வைத்திருந்த பின், குளிக்கலாம்.

Published by
லீனா

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

7 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

7 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

8 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

9 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

9 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

9 hours ago