rice flour (1)
Rice flour-அரிசி மாவை வைத்து நம் முக அழகை அதிகரிப்பது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.
அனைவரது இல்லங்களிலுமே மிக எளிமையாக கிடைக்கக் கூடியது அரிசி மாவு. சரும பிரச்சனைகளுக்கு அரிசி மாவு ஒரு நல்ல தீர்வை கொடுக்கிறது. ஜப்பானிய பெண்கள் மற்றும் கொரியர்கள் தங்கள் முக அழகை மேம்படுத்த அரிசி மாவையும், அரிசி மாவால் தயாரிக்கப்பட்ட கிரீம்களையும் பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் தான் அவர்கள் முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று கண்ணாடி போல உள்ளது.
அரிசி மாவு 2 ஸ்பூன் ,முல்தானி மட்டி ஒரு ஸ்பூன் ,எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் இவற்றை கலப்பதற்கு பால் அல்லது தயிரை சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழிவி வரவும், இவ்வாறு வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்து வரும் போது சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்கிவிடும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன் அரிசி மாவு மற்றும் பன்னீரை கலந்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் விட்டு காலையில் முகம் கழுவி வர வேண்டும் .தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு செய்யும் போது முகப்பருக்கள் காய்ந்து வடு தெரியாமல் மறைந்து விடும்.
மூக்கு பகுதியில் எண்ணெய் பசை அதிகமாக சுரக்கும் .இதனால் அங்கு அழுக்கு படிந்து நாளடைவில் அது அரும்புகளாக மாறி குழி ஆகிவிடும். அரிசி மாவு 1 ஸ்பூன், காபி பவுடர் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் அரை ஸ்பூன், கற்றாழை ஜெல் அரை ஸ்பூன் இவற்றை கலந்து அரும்புகள் உள்ள இடத்தில் மட்டும் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்தால் வெள்ளை அரும்புகள் வெளியேறிவிடும்.
அரிசி மாவுடன் கற்றாழை ஜெல்லை கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழிவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது கருவளையங்கள் மறைந்துவிடும்.
வாரத்திற்கு ஒரு முறை உங்கள் முகத்திற்கு அரிசி மாவை கொண்டு ஸ்க்ரப்பிங்[scrubbing] செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்க்ரப்பிங் செய்யும் போது முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கும். முகமும் பார்ப்பதற்கு மென்மையாகவும் பளபளப்பாகவும் காணப்படும்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…