பற்கள் பளபளக்க சிறந்த பேஸ்ட் எது.?

Published by
K Palaniammal

சென்னை: நம்மை அழகாக காட்டுவதில் பற்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதன் அடிப்படையில் ஒரு சிலருக்கு பற்கள் திடீரென மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும். இதனால் வாயை திறந்து மற்றவர்களிடம் சகஜமாக பேசுவதற்கு தயங்குவார்கள். அதேபோல் கடைக்குச் சென்று அங்கு கடைக்காரரிடம் பேஸ்ட் கேட்டால் கிராம்பு போட்டதா ?. வேப்பிலை போட்டதா?. புதினா போட்டதா? என கேட்கிறார், என்னடா இது பேஸ்ட்டுக்கு வந்த சோதனை அப்படின்னு நெனச்சு எதை வாங்குவது என்று தெரியாமல் சில நேரத்தில் குழம்பி விடுவோம்..அதை பற்றி எல்லாம் இங்கே தெரிந்து கொள்வோம் .

பற்கள் மஞ்சளாக மாற காரணங்கள்;

நம் உணவை எச்சிலுடன் சேர்த்து மென்று  சாப்பிடும் போது பற்களில் படிய வாய்ப்புள்ளது, பற்கள் மட்டுமல்லாமல் பல் ஈறுகளிலும் ,இடுக்குகளிலும் படியும் .இதை தினமும் சரியாக பல் துளைக்கினோம் என்றால் நிச்சயம் நீங்கிவிடும். இதுவே கடமைக்கு செய்தோம் என்றால் பற்களில் படிந்து உள்ள உணவுகள் சேர்ந்து நாளடைவில் கால்சியம் ,பாஸ்பேட் போன்ற தாதுக்களுடன் சேர்ந்து கடினமாகி மஞ்சள் நிறத்தில் மாறி கரையாகி விடும். இப்படி இருக்கும் பட்சத்தில் பத்து முறை நீங்கள் பிரஸ் செய்தாலும் நீங்காது.

எந்த பேஸ்ட் சிறந்தது?

தற்போது மார்க்கெட்டுகளில் பலவிதமான பேஸ்டுகள் வந்துவிட்டது .ஆனால் அனைத்து  பேஸ்டுகளிலும் அடிப்படையாக foaming  ஏஜென்ட் நுரை வருவதற்காகவும் ,Abrasive ஏஜென்ட் ஈறுகளில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வதற்காகவும் சேர்க்கப்படுகிறது .இதற்குப் பிறகு பேஸ்ட்டின்  கலர் மற்றும் வாசனைக்காக இன்னும் பல கெமிக்கல் சேர்த்து நம்மை கவர்வதற்காக சேர்க்கப்படுகிறது.

உதாரணமாக கூற வேண்டும் என்றால் தோசை மாவை வைத்து தோசை ஊற்றலாம், ஆனால் அந்த தோசை மேல் நமக்கு பிடித்த மசால் தோசை, கறி தோசை என பலவித தோசையை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் தோசை மாவு ஒன்றுதானே அதுபோல்தான் பேஸ்டுகளும் எல்லா பேஸ்டும் ஒன்றுதான். நம்மை கவருவதற்காக பல பிளேவர்களை சேர்த்து தயாரித்து விற்கின்றனர் . இதில் உள்ள கெமிக்கல் மிக நச்சு வாய்ந்தது தான் ஆனால் நாம் அதை விழுங்கப் போவதில்லை அதனால் பயப்படத் தேவையில்லை.

ஹெர்பல் பேஸ்ட் பயன்படுத்தலாமா?

Ministry of consumer affairs ஒரு ஆய்வை வெளியிட்டள்ளது . இந்தியாவில் உள்ள அனைத்து பேஸ்ட்களையும் ஆராய்ச்சி செய்து அதன் முடிவில் எந்த ஒரு ஹெர்பல் பேஸ்ட்களும் 100% இயற்கையானது அல்ல. வெறும் 2.5-10  சதவீதம் தான் இயற்கையான பொருட்கள் சேர்க்கப்படுகிறது. மீதமுள்ள 90 சதவீதம் ரசாயனம் தான் என ஆய்வு குறிக்கிறது.

மேலும் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிளூரைடு  இல்லாத பேஸ்ட்களை கொடுக்க வேண்டும். 6- 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குறைந்த அளவு  பிளூரைடு  பேஸ்டுகளை கொடுக்க வேண்டும் ,ஏனென்றால் அவர்கள் சரியாக எச்சிலை துப்பினாலும் ப்ளூரைட் சிறிதளவு சேர்க்கப்பட்டிருக்கும் .மேலும் அந்த வயது காலகட்டத்தில் தான் அவர்களுக்கு நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ப்ளுரைடு பேஸ்ட்டுகளை பயன்படுத்தலாம்.

பல் துலக்க சிறந்த பிரஸ் எது?

பேஸ்ட்டுகளைப் போல பிரஷ்களும் மார்க்கெட்டுகளில் அதிகமாக கிடைக்கிறது. பல் துலக்க பேஸ்ட்களை விட பிரஷ்கள் அவசியமானது. பிரஷ்களில் ஹார்டு  ,மீடியம், சாப்ட் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சாஃப்ட் வகை பிரஷ்களை பயன்படுத்துவது தான் சிறந்தது. ஹார்டு மற்றும்  மீடியம் வகைகளை தவிர்க்க வேண்டும் .ஏனெனில் இது நாளடைவில் பற்கள் தேய்மானம் அடைய செய்து விடும்.

மேலும் ப்ரஷ்களின்  தலைப்பகுதி சிறிதாக இருக்குமாறு பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கடவாய் பற்களை சுத்தம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் .மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிரஷ்களை நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பல் துலக்கும் முறை;

75% மக்கள் பல் தேய்ப்பதை தவறாக செய்கின்றனர். பிரஷ்ஸில் ஒரு வேர்க்கடலை அளவு மட்டும் பேஸ்டை  வைத்தால் போதுமானதாகும்.  45° ஆங்கிளில் ஈரிலிருந்து பல்லிற்கு தேய்க்க வேண்டும். பல் இடைவெளிகளில் தேய்க்க வேண்டும் இவ்வாறு இரண்டு நிமிடங்கள் தேய்ப்பதே போதுமானது. அதற்கு மேல் தேய்க்க கூடாது.

அவ்வப்போது நல்லெண்ணையில் வாய் கொப்பளித்து வருவதன் மூலம் பல் ஈறுகள் ஆரோக்கியமாக இருப்பதோடு மஞ்சள் நிறம் நீங்க உதவி செய்யும். ஆகவே நம்மை அழகாக காட்டும் பற்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும்  பராமரிப்பது நம் கடமையாகும்.

Recent Posts

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

28 minutes ago

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…

48 minutes ago

அஜித்தை காப்பாற்ற முடியலன்னு வருத்தமா இருக்கு…வீடியோ எடுத்தவர் கொடுத்த பேட்டி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…

1 hour ago

அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை – ராமதாஸ்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…

2 hours ago

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

4 hours ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

4 hours ago