தமிழகத்தில் சில இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், […]
தலைநகர் சென்னையில் மிதமாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இந்நிலையில் அதிகாலை முதலே தலைநகர் சென்னையில் கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம், விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் மழை […]
வடகிழக்கு பருவமழை வரும் 25-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்தியவில் தற்போது தென்மேற்கு பருவமழையின் சூழல் தொடங்க உள்ளது என்றும் வடகிழக்கு பருவமழை அக்.,25ம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து […]
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நம் அண்டை மாநிலமான கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கேரளாவின் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களை […]
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் என்றும், அந்தமான், நிக்கோபார் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி. நாளை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 நாள் கனமழை பெய்யும் என்பதால் கேரளா, கர்நாடகாவிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத், மகாராஷ்டிராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், தென்மேற்கு மத்திய மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா […]
10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் : வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறாக கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகெங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு […]
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது பருவமழை காலம் தொடங்கிவிட்டது. என இந்திய வானிலை ஆய்வுத்துறை (Indian Meteorological Department ) தலைவர் குலதீப் சிவஸ்தவா தெரிவித்துள்ளார். அதன் படி, மேற்கு கிழக்கு பகுதி ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பருவமழை சீசன் தொடங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் டெல்லியில் பருவமழை தீவிரமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பீகார், இமயமலை பகுதியை ஒட்டியுள்ள மேற்கு வங்கம், உத்திர பிரதேஷம், […]
கேரளாவின் ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் நான்கு வகையான வண்ணத்தில் எச்சரிக்கை முறையை கொண்டுள்ளது. அதாவது பச்சை என்றால் எந்த எச்சரிக்கையும் இல்லாத லேசான மழை, மஞ்சள் என்றால் மிதமான மழை, ஆரஞ்சு என்றால் எச்சரிக்கையுடன் கூடிய அதிக மழைப் பொழிவு மற்றும் சிவப்பு என்றால் எச்சரிக்கையுடன் மிக அதிக […]
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஆனது கடுமையாக இருந்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்கள் வெயில் மக்களை சுட்டு எரித்து வருகிறது.இதனால் மக்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு பக்கம் கடுமையான வெயில் என்றால் மறுபக்கம் கொல்லும் கொரோனா என்று அசாதாரண சூழ்நிலையை மக்கள் சந்தித்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வானிலை குறித்து ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது; அதில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் […]
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடஙகலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலிலும் மழைபெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மாயம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதியில் சூறாவளி காற்று வீசலாம் […]
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு தென்மேற்கு பருவ மழை வெப்பச் சலனத்தால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர்,திருவாரூர், புதுக்கோட்டை நாகப்பட்டினம் மாவட்ட பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான […]
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது . மூன்று நாட்களுக்கு மத்திய மேற்கு வங்க ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால் […]
தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வட மேற்கு திசை நோக்கி நகரும் என்பதால் கர்நாடகத்தில் சில பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 12 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டியபகுதியில் மற்றும் […]
4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் தேனி திண்டுக்கல் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் […]
வங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம். வங்கக் கடலுக்கு இரண்டு நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 13 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் வரும் 8ம் தேதி […]
வெப்பசலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டத்தில் நெல்லை,குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வெப்பசலனம் காரணமாக நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 20 […]
அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும், அதற்க்கு “நிகர்சா” என வங்கதேசம் பெயரிட்டது. அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று இன்னும் 12 மணிநேரத்தில் (இன்று மாலை) புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. இந்த புயல், நாளை மகாராஷ்டிரா-குஜராத் […]
17 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி, ஈரோடு,சேலம்,குமரி,நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபி கடையிலிருந்து காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் […]
அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி, காற்றழுத்த மண்டலமாக மாறி, புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு, மத்தியக்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் நோக்கி வரும் 3ஆம் தேதி நகரும். இதனால் கர்நாடகா […]