குப்பை கிடங்கில் நேர்ந்த விபரீதம்.! மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உடல் கருகி பலி.! ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை.!

நாகை குப்பை கிடங்கில் குப்பை கொட்டும் பொது மின்கம்பி மீது உராய்வு ஏற்பட்டு தூய்மை பணியாளர் உடல் கருகி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் கோட்டைவாசல்படி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சுற்றுவட்டார பகுதி குப்பைகள் ஒன்றாக குவிக்கப்பட்டு அழிக்கப்படும். அப்படி குப்பை கொட்டுவதற்காக இன்று டிப்பர் லாரி மீது தூய்மை பணியாளர் ஏறி நின்று குப்பை கொட்டும்போது தவறுதலாக உயரே இருந்த மின் கம்பி அவர் மீது உரசியது.
இந்த விபத்தில் , உயர் மின்னழுத்த கம்பி உரசி தூய்மை பணியாளர் விஜய் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மின் விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் ஜோதியும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த உயர் அழுத்த மின் கம்பி விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025