கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பவானி, நொய்யல், சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்மழை காரணமாக கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை 15 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 24 அடியாக […]
தோடர் இன மக்களின் கோயிலில் கூரை மாற்றும் திருவிழா நேற்று ஊட்டி அருகேயுள்ள பகல்கோடுமந்து பகுதியில் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் உட்பட பல்வேறு வகையான ஆதிவாசி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆதிவாசி இனமக்களும் தங்களுக்கு என தனி பாரம்பரிய உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்களை கொண்டுள்ளனர். இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் 67 மந்துகளில் […]
நீலகிரி மாவட்டம் உதகையில் 122 வது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது. , காய்கறி கண்காட்சி, வாசனை பொருட்கள் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி ஆகியவை முடிந்துள்ள நிலையில், உதகையின் மணி மகுடமாகத் திகழும் தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. 1 லட்சம் மலர்களைக் கொண்டு மேட்டூர் அணை, 3500 மலர்களைக் கொண்டு பார்பி டால், 300 கிலோ வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு வள்ளுவர் கோட்டம் போன்றவற்றின் மாதிரிகளை […]
நீலகிரி மாவட்டம் உதகையில், காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடையும் நிலை எற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி வரும் காட்டெருமைகள், உணவுதேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. நேற்று உதகை – குன்னூர் நெடுஞ்சாலையில், பிக்கட்டி என்ற பகுதியில் காட்டெருமைகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. இதனால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கவனத்துடனும்,பயத்துடனும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
நீலகிரி மாவட்டம் உதகையில் மீண்டும் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக பனிப்பொழிவின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. கேத்தி பள்ளத்தாக்கு, உதகை தலைக்குந்தா பகுதிகளில் அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக, புல்வெளிகள் வெண்ணிற கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது. புல்வெளியில் படர்ந்துள்ள பனியில் நடந்துசென்று சுற்றுலாப் பயணிகள், தங்களது […]
புத்தாண்டையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கடுங்குளிருக்கு மத்தியில் உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். உதகையில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக விளையாடிக் களித்தனர். படகு சவாரியும் களை கட்டியிருந்தது. ஏராளமானோர் மிதி படகு மற்றும் துடுப்புப் படகு சவாரியில் ஈடுபட்டனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்வகைகளைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் அவற்றின் அருகில் நின்று ஆர்வத்துடன் செல்ஃபி […]
ஊட்டி சிறுவர் மன்றம் அருகே அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 16–ந் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், உஷ பூஜை, சீவேலி, பஞ்ச கவ்வியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு ‘சாமியே சரணம் அய்யப்பா‘ என்ற கோஷத்துடன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை […]