தூத்துக்குடி பெண்களுக்கு அரிய வாய்ப்பு.! சுய உதவி குழுவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை…

Magalir Suya Uthavi kulu

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கும் பணிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தற்காலிக பணியாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க எதுவாக பணியின் விவரங்கள் குறித்து தற்போது மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூடுகை மற்றும் கூட்டாண்மை பிரிவின் கீழ் வட்டார வள வல்லுநர் (BRP) மூலம் வட்டார அளவிலான கூட்டமைப்புகள் (BLF), ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLF), சமுதாய வள பயிற்றுநர்கள்(CRPs) மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு (SHG) பயிற்சி அளித்திட வட்டார வள வல்லுநர் (BRP) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்று அப்பதவிக்காக கேட்கப்பட்டுள்ள தகுதிகள் குறித்தும்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இப்பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானதே ஆகும்.

இப்பணிக்கான தகுதி விவரங்கள்…

  • சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • 01.03.2024 அன்று 25-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • வட்டார அளவிலான கூட்டமைப்பு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் 2-3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • தகவல்களை தெரிவிக்கும் திறன் மற்றும் மக்களிடம் வெளிப்படுத்தும் தனித்திறமை பெற்றிருக்க வேண்டும். செயல்திறன்
  • கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.(Excel, Word & Etc)

மேற்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு, விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் வரும் ஆகஸ்ட் 09ஆம் தேதியன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை கட்டடம், இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி-க்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பணி நியமனம் கோரும் விண்ணப்பத்தினை சுய விவரங்கள் (Bio Data) அடங்கிய ஆவண நகல்களுடன் சமர்ப்பித்திட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி ஐஏஎஸ் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Mr. Subramanian
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings