குஜராத்தின்,கட்ச் வளைகுடா பகுதியில் நேற்று இரவு 2 சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்டுள்ளதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு.
குஜராத்தின்,கட்ச் வளைகுடா பகுதியில் நேற்று(நவம்பர் 26) இரவு எம்விஎஸ் ஏவியேட்டர் மற்றும் அட்லாண்டிக் கிரேஸ்(MVs Aviator & Atlantic Grace) என்ற இரண்டு கப்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஆனால்,நல்வாய்ப்பாக எந்தவித உயிர் சேதமும் இல்லை,ஆனால்,கப்பலைச் சுற்றி எண்ணெய் படலம் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டது.இதனைத் தொடர்ந்து,இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்களானது, சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
மேலும்,அதிகாரபூர்வ அறிக்கையின்படி, “இந்திய கடலோர காவல்படை கப்பல்கள்,ஹெலிகாப்டர் ஆகியவை விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பப்பட்டது.எண்ணெய் கசிவு அல்லது இரண்டு வணிக கப்பல்களில் இருந்து எந்தவித கடல் மாசுபாடும் இல்லை என்றும்,அந்த பகுதியில் உள்ள தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…