ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உயிரிழந்த அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது இவர்கள் சென்ற வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி நடந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது .அப்பொழுது போலீசார் தடுக்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார் ராகுல் காந்தி.இதன் பின் தடை உத்தரவை மீறி ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற கார் பந்தய அரங்கின் விருந்தினர் இல்லத்துக்கு அவர்களை கொண்டு சென்ற காவல்துறையினர் பிறகு அவர்களை விடுதலை செய்தனர்.இதன் பின்னர் அவர்கள் இருவரும் டெல்லிக்கு சென்றனர்.
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…