NIA custody for two arrested in Bengaluru blast case [FILE IMAGE]
Rameshwaram Cafe: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று கைதான இருவருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல்.
பெங்களுருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி குண்டுவெண்டிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 10 பேர் காயமடைந்தனர். பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகாமையிடம் ஒப்படைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அந்தவகையில் கடந்த மாதம் வெடிகுண்டுகள் பொருட்கள் சப்ளை செய்ததாக கூறப்படும் முஸாமில் ஷெரீஃப் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இருவரை என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்தனர். இந்த சூழலில், மேற்குவங்க மாநிலத்தில் தலைமறைவாக இருந்த முசாவீர் ஹுசைன் ஷாஸேப் மற்றும் அத்புல் மதீன் தாஹா ஆகிய இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் மறைமுகமாக இருந்ததை கண்டுபிடித்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் இன்று காலை பெங்களூருவிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில், நேற்று கைதான முசாவீர் ஹுசைன் ஷாஸேப் மற்றும் அத்புல் மதீன் தாஹா ஆகிய இருவருக்கும் 10 நாட்கள் என்ஐஏ காவல் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு தாக்கல் செய்த நிலையில், அனுமதி அளிக்கப்பட்டது
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…