டெல்லியில் கலவரம் தொடர்பாக 106 பேர் கைது , 18 எஃப்.ஐ.ஆர் பதிவு.!

- வடகிழக்கு டெல்லியில் கலவரம் தொடர்பாக காவல்துறை 106 பேரை கைது செய்து, 18 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறை 106 பேரை கைது செய்து, 18 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே நேற்று வடகிழக்கு டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் பேசுகையில், தற்போது நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்துறை அதன் கடமையை செய்து வருகிறது என்றும் காவல்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025