11 வயது சிறுமிக்கு தந்தை, சகோதரர், தாத்தா தொடர்ந்து பாலியல் தொந்தரவு..!

Published by
murugan

புனேவில் இருந்து நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 11 வயது சிறுமிக்கு தனது சொந்த தந்தை மற்றும் சகோதரரால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சிறுமியின் தாத்தா மற்றும் தூரத்து மாமாவும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.

இந்த விவகாரம் குறித்து நேற்று முந்தினம் தகவல் அளித்த புனே காவல்துறை, இவை அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினர். இது குறித்து ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அஷ்வினி சத்புடே கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது குடும்பத்தினரும் பீகாரைச் சேர்ந்தவர்கள். இந்த குடும்பம் தற்போது புனேயில் வசித்து வருகிறது. இந்த 11 வயது சிறுமி பள்ளியில் நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் அமர்வின் போது தனக்கு நடந்த சம்பவங்களை கூறியபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பேசியதில், 2017ஆம் ஆண்டு முதல் அவளது தந்தை அவளிடம் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. அப்போது பீகாரில் வசித்து வந்தனர். 2020 ஆம் ஆண்டில் அவளது சகோதரரும் தவறாக நடந்து கொள்ள தொடங்கினார். பின்னர் அவளது தாத்தாவும், மாமாவும் அவளை தகாத முறையில் தொடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கூட்டு பலாத்கார வழக்கு அல்ல:

அனைத்து சம்பவங்களும் தனித்தனி சந்தர்ப்பங்களில் நடந்ததால் இது கூட்டு பலாத்கார வழக்கு அல்ல என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் குற்றங்களை அறிந்திருக்க மாட்டார்கள் என்றும் காவல் ஆய்வாளர் அஷ்வினி சத்புதே கூறினார்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

9 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

12 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

13 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

15 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago