மஹாராஷ்டிராவில் சட்டசபை தலைவரை தகாத வார்த்தைகளால் பேசிய 12 பாஜக எம்எல்ஏ-க்கள் ஒரு ஆண்டிற்கு சஸ்பெண்ட்.
இன்று முதல் 2 நாட்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், சபாநாயகர் பதவியில் இருந்த பட்டோலி ராஜினாமா செய்ததால் இடைக்கால சபாநாயகராக பாஸ்கர் ஜாதவ் செயல்பட்டு வருகிறார்.
இதனையடுத்து, சட்டசபையில் மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர் சட்டசபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் 12 பேர் தற்காலிக சபாநாயகரான பாஸ்கர் ஜாதவின் அறைக்கு சென்று, சபாநாயகரை அவதூறான வார்த்தையால் பேசிய நிலையில், கடும் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் அமளியில் ஈடுபட்டதாக கூறப்படும் பராக் அலவானி, ராம் சத்புட், சஞ்சய் குட், ஆஷிஷ் ஷெலார், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அதுல் பட்கல்கர், ஷிரிஷ் பிம்பிள், ஜெய்குமார் ராவல், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே, மற்றும் கீர்த்திகுமார் பகடி ஆகிய 12 பேரை ஓராண்டிற்கு சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…