யூடியூபில் தற்கொலை வீடியோவை பார்த்து தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி !

Default Image

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரை சார்ந்த ரதோட் என்பவரின் மகள் ஷிகா வயது   12. இவர் தனது தந்தையான ரதோட்டிடம் உள்ள செல்போனை வாங்கி அடிக்கடி யூடியூபில் வீடியோ பார்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

ஷிகா தனது தந்தை செல்போனை வாங்கி  யூடியூபில் அதிகமாக  தற்கொலை சம்மந்தமான வீடியோக்களை விரும்பி  பார்த்து வந்து உள்ளார்.இந்நிலையில் ஷிகா கடந்த 29-ம் தேதி மாலை நான்கு மணி அளவில் வீட்டில் உள்ள ரூம்மில் தனியாக இருந்து உள்ளார்.

அந்த ரூம்மில் இருந்த மின்விசிறியில் ஷிகா கயிறை கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஷிகா தூக்கில் தொங்குவதை முதன் முதலில் அவளது இளைய சகோதரி தான் பார்த்து உள்ளார்.தன் சகோதரி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறினார்.

அதன் பின் அந்த ரூம்மிற்க்கு வந்த ஷிகா பெற்றோர்கள் தூக்கில் இருந்து ஷிகாவை இறக்கி மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் சிகிக்சை அளித்தும் ஷிகா  இறந்து விட்டார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army