பெங்களூர் ராஜாஜி நகரை சார்ந்த ஜெயக்குமார் ஜெயின்.இவரின் மனைவி பூஜாதேவி இவர்களுக்கு 15 வயதில் மகளும் ஒரு மகளும் , 12 வயதில் ஒரு மகனும் உள்ளார்கள். ஜெயக்குமார் துணி வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த 17-ம் தேதி பூஜாதேவி மகனுடன் புதுச்சேரியில் குடும்ப விழாவிற்கு சென்றனர்.அப்போது வீட்டில் ஜெயக்குமாரும் அவரது மகளும் இருந்தனர்.
அப்போது ஜெயக்குமார் வீட்டின் பாத் ரூமில் இருந்துபுகை வந்தது.இதை தொடர்ந்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பாத் ரூமை திறந்து பார்த்த போது ஜெயக்குமார் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.
பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது ஜெயக்குமார் ரூம்மில் ரத்த கரை இருந்ததால் அவர் கொலை செய்து எரிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.ஆனால் வீட்டில் ஜெயக்குமார் மகள் மட்டுமே இருந்ததால் அவரை விசாரணை செய்தனர்.அப்போது அவரது காலில் தீ காயம் இருந்ததால் அவரின் மீது சந்தேகம் வலுவடைந்தது.
பின்னர் விசாரணையில் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.அதே பகுதியை சார்ந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்து உள்ளார்.மேலும் அடிக்கடி ஜெயக்குமார் வீட்டிற்கு பிரவீன் வந்து உள்ளார்.இதனால் ஜெயக்குமார் மகளிடம் கண்டித்து உள்ளார்.ஜெயக்குமார் மகளிடம் இருந்து போனையும் பிடுங்கி வைத்து உள்ளார்.
இதனால் தனது அப்பாவை கொல்ல காதலனுடம் ஜெயக்குமார் மகள் திட்டமிட்டர்.அதன் படி வீட்டில் கடந்த 17-ம் தேதி அம்மா , தம்பி புதுச்சேரிக்கு சென்றதால் ஜெயக்குமாரை கொல்ல அவரது மகள் முடிவு செய்தார்.
இரவு பாலில் தூக்கமாத்திரையை கலந்து கொடுத்து காதலனுடன் கத்தியால் குத்தி உடலை பாத் ரூமில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டனர்.அப்போது இருவரின் காலிலும் தீ காயம் ஏற்பட்டது.எலக்ட்ரிக் ஷாக் மூலமாக வீட்டில் தீ பிடித்து விட்டதாக நடனமாட இருந்தனர்.ஆனால் போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…