ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன – ஒடிசா தலைமைச் செயலாளர்

odisa train

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என ஒடிசா தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து நாட்டை பெரும்  சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பலர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். மேலும், உரிய செயல்முறைக்குப் பிறகு அனைத்து உடல்களும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. உடல்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவை ஒடிசா அரசே ஏற்கும். “இன்னும் 124 சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்