ஆந்திரா:நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.அப்போது,இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அண்மையில் 24 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில்,ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.இந்த புதிய அமைச்சரவையில் 25 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜாவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,ரோஜாவும் இன்று காலை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…