எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகேஷ் குமாரை தேர்வு செய்யாததையும் கங்குலி சமீபத்திய பேட்டி ஒன்றில் விமர்சித்து பேசியுள்ளார்.

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை ஒரு போட்டியிலும் ஆடும் லெவனில் சேர்க்கவில்லை என்பது ரசிகர்களுக்கு இன்னும் பேரதிர்ச்சியான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அது மட்டுமின்றி அவரை ஒரு அவரை ஒரு போட்டியில் கூட ஆட வைக்காத நிலையில் முன்னாள் கிரிகெட் வீரர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசுகையில் ” இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் குல்தீப் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பதை நினைக்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை அவர் விளையாடாதது குறித்து என்னிடம் கேட்டீர்கள் என்றால் அவர் மான்செஸ்டர் (நான்காவது டெஸ்ட்), லார்ட்ஸ் (மூன்றாவது டெஸ்ட்), மற்றும் பர்மிங்காம் (இரண்டாவது டெஸ்ட்) ஆகியவற்றில் குல்தீப் ஆடியிருக்க வேண்டும் என்று சொலேன்.
ஏனென்றால், தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல், ஐந்தாம் நாளில் அணிகளை ஆல்-அவுட் செய்வது கடினம். அந்த சமயத்தில் குலதீப் யாதவ் போன்று ஒரு சிறந்த பந்துவீச்சாளர் இருந்திருந்தார் என்றால் நிச்சயமாக இங்கிலாந்து வீரர்கள் கொஞ்சம் திணறியிருப்பார்கள்”எனவும் கங்குலி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “பெரிய அணிகளுக்கு எப்போதும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். குல்தீப், இந்தியா எதிர்காலத்தில் பயன்படுத்த வேண்டிய ஒரு வீரர்,” என்று கூறினார்.
குல்தீப்பின் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சு, இங்கிலாந்து ஆடுகளங்களில் பயன்படுத்தப்படவில்லை என்பது அவரது முக்கிய விமர்சனமாக இருந்தது. இந்தியாவின் பந்துவீச்சு உத்தி, மான்செஸ்டர் டெஸ்டில் ஜடேஜா மற்றும் சுந்தரின் சதங்களால் ட்ரா செய்யப்பட்டாலும், தோல்வியை தவிர்க்க மட்டுமே உதவியது என்று கங்குலி மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
கங்குலி, ஸ்விங் பந்து வீச்சாளர் முகேஷ் குமாரை தேர்வு செய்யாததையும் விமர்சித்தார். “முகேஷ் குமார், குறிப்பாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில், உள்ளூர் போட்டிகளில் அபாரமான புள்ளிவிவரங்களைக் கொண்டவர். இங்கிலாந்து ஆடுகளங்கள் அவருக்கு ஏற்றவையாக இருந்திருக்கும். அவரை தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது,” என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்த முன்னாள் வீரர் தெரிவித்தார். முகேஷின் உள்நாட்டு கிரிக்கெட் பதிவுகள், இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கங்குலி கருதினார்.