டிசம்பர் மாதத்திற்குள் 3 முதல் 4 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்க திட்டம் – சீரம் இன்ஸ்டிடியூட்

Published by
Venu

டிசம்பர் மாதத்திற்குள் 3 முதல் 4 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி  வந்தது. இந்தியாவில் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே தான் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்தனர். மேலும் அதற்க்கு 1077 தன்னாலர்வர்கள் முன்வந்தனர். அவர்களின் உடம்பில் கொரோனா தொற்று செலுத்தப்பட்டது.அதன்பின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை அவர்கள் மீது செலுத்தினார்கள்.  தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 1077 பேருக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாக அவர்கள் நடத்திய சோதனை முடிவில் தெரியவந்துள்ளதாகவும், மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெரும் என பிரிட்டன் அரசுக்கு நம்பிக்கை இருந்த நிலையில், 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் செய்தது.எனவே இந்தியாவில்  புனேவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் சீரம் இன்ஸ்டிடியூட் அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது. இந்தியாவுக்கு இந்த மருந்தினை தயாரிக்க ஒப்புதல் பெற்றுள்ளது. இந்நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக இயக்குனர் இயக்குனர் ஆதார் பூனவல்லா கூறுகையில் , ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கான விண்ணப்பம் மத்திய அரசிடம் அனுப்பட்டுள்ளது.இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும்.மும்பை மற்றும் புனேவில் உள்ள சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் இந்த மருந்து பரிசோதிக்கப்படும்.அவர்களுக்கு செலுத்திய பின்னர் கிடைக்கும் முடிவினை பொறுத்தே இந்திய சந்தையில் இந்த மருந்து விற்பனைக்கு வருமா ? வராதா ? என்பது தெரியும்.மேலும் இந்த மாதம் டிசம்பர் மாதத்திற்குள் 3 முதல் 4 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும்,2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த தடுப்பூசி அதிக அளவில் இந்திய மக்களை சென்றடையும் என்று நம்புவதாகவும் பூனவல்லா தெரிவித்துள்ளார்.குறிப்பாக தடுப்பூசியின் விலை ரூ.1000 இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

10 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

11 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

11 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

12 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago