கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.45 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மதுபானக் கடைகள் மூடப்பட்டது. மது கிடைக்காத விரக்தியில் பல மாநிலங்களில் மது பிரியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மது பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர்.
கொரோனா பாதிப்பால் 40 நாட்களாக மூடப்பட்ட மதுக்கடை நேற்று டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் திறக்கப்பட்டது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் நேற்று மது கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மது வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால், மது பிரியர்கள் சமூக விலகலை கடைபிடித்து மதுக்கடைக்கு வெளியில் நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நின்று மது வாங்கிச் சென்றனர்.
நேற்று மட்டும் கர்நாடக மாநிலத்தில் ரூ. 45 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது. நேற்று மட்டும் 3.90 லட்சம் லிட்டர் பீர் மற்றும் 8.50 லட்சம் லிட்டர் மதுபானம் விற்பனையானது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…