3 வேளாண் சட்டங்கள்; போராட்டம் தொடரும்- விவசாயிகள் சங்கம்..!

போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படாது, நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக காத்திருப்போம் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டாலும், குளிர்கால கூட்டத்தொடரில் அதிகாரப்பூர்வமாக 3 சட்டங்களும் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் கைவிட பிரதமர் கோரிக்கை விடுத்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தனது ட்விட்டரில் போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படாது, நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக காத்திருப்போம் என பதிவிட்டுள்ளார்.
आंदोलन तत्काल वापस नहीं होगा, हम उस दिन का इंतजार करेंगे जब कृषि कानूनों को संसद में रद्द किया जाएगा ।
सरकार MSP के साथ-साथ किसानों के दूसरे मुद्दों पर भी बातचीत करें : @RakeshTikaitBKU#FarmersProtest
— Rakesh Tikait (@RakeshTikaitBKU) November 19, 2021