ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் முக்கிய தளபதி உட்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக நேற்று மாலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடுதலின் போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் டிஆர்எஃப் இயக்கத்தின் முக்கிய தளபதி மெஹ்ரான் யாசின் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பலியானவர்கள் அதிகமான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்போடு தொடர்புள்ளவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…