ஆந்திராவிலுள்ள கிழக்கு கோதாவரி பகுதியில் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்றிருந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற நிலை தான் உருவாகி உள்ளது. சில ஆண்கள் பெண்களிடம் தவறான எண்ணத்துடன் நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் தனியாக வெளியில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறமிருக்க, தனது ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லக் கூடிய பெண்களுக்குமே பாதுகாப்பு கிடையாது. சில இடங்களில் ஆண் நண்பர்களே தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை மானபங்கப்படுத்தி விடுகின்றனர் அல்லது அவ்விடத்திலிருந்து அவர்கள் தப்பித்து சென்று விடுகிறார்கள். அப்படியும் இல்லை என்றால் சில ஆண் நண்பர்கள் நின்று போராடினாலும் எதிரில் இருக்கக்கூடியவர்கள் கூட்டமாக வந்து இருக்கும் பொழுது ஒன்றும் செய்ய முடியாமல் தங்கள் உயிரையும் இழந்துவிடுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது ஆந்திராவில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது பெண் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கடற்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது அங்கே சென்ற மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை மடக்கிப் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பாக அந்தப் பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்து அடிக்கடி அச்சுறுத்தி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்காக சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…