மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த 4 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவு..!

Published by
லீனா

நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வார திங்கள் கிழமை முதல் துவங்கி நடைபெற்று வந்த  நிலையில், பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண் , ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்தனர். கையில் வைத்து இருந்த மஞ்சள் நிற வண்ணப்புகை வீசும் ஒரு வகை பட்டாசை வீசினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது.

உடனே சுத்தரித்து கொண்ட பாதுகாவலர்கள் அவர்களை உடனடியாக கைது செய்து வெளியே அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி.மனோரஞ்சன் என்பவர்கள் நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவையில் உள்ளே குதித்து கோஷங்களை எழுப்பினர்.

எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்ததற்கு ஒப்பானது – மல்லிகார்ஜுனே கார்கே

நாடளுமன்ற வளாகத்தில் வெளியே ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்ப்பட்டனர்.  அப்போது அப்பெண் நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை. மத்திய அரசு எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. எங்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். எங்கள் மீது கவனத்தை திருப்பி எங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்றே இவ்வாறு செய்தோம் என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக கைதான 4 பேரையும், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், டெல்லி காவல்துறை நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்தது திட்டமிட்ட சதிச்செயல் என தெரிவித்துள்ளனர்.

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

52 minutes ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

59 minutes ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

2 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago