J&K encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 4 வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கிய என்கவுன்டர் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனந்த்நாக்கில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமை தொடங்கிய துப்பாக்கிச் சண்டை 48 மணிநேரத்தை கடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 4 அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.