Pawan Kalyan [File Image]
தெலுங்கானாவில் போட்டியிட்ட நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி டெபாசிட் இழந்துள்ளது.
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என 4 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. பெரும்பாலும் வெற்றி வாய்ப்புகள், அடுத்த ஆட்சி யாருடையது என்ற விவரங்கள் தெரியவந்து விட்டன.
தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது 64 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி இந்த முறை 39 தொகுதிகளை மட்டுமே வென்று இருந்தது. பாஜக 8 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் (AIMIM) 7 இடங்களிலும், சிபிஐ 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
இதில், பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்திருந்த பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி, குகட்பள்ளி, தந்தூர், கோடாட், கம்மம், வைரா எஸ்டி, கொத்தகுடெம், அஸ்வராப்பேட்டை எஸ்டி மற்றும் நாகர்கர்னூல் உள்ளிட்ட 8 தொகுதிகளில் போட்டியிட்டது.
தெலுங்கானா தேர்தல் ஹைலைட்ஸ்… ஆட்சி கோரும் காங்கிரஸ்.! முன்னேறிய பாஜக
தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண், திரைப்படத்தில் நடித்துக்கொண்டே ஜனா சேனா கட்சியின் மூலம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடிப்பையும் அரசியலையும் கவனித்து வரும் பவன் கல்யாணின் கட்சி தெலுங்கானா தேர்தலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி டெபாசிட் இழந்தது. இதனால், ஆந்திரா மாநிலத்தில் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த, பவன் கல்யாணுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…