டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் வயது முதிர்ந்த ஒருவர் தனது 6 பேரக் குழந்தைகளுடன் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று, தனது மனைவியும், 22 வயது நிரம்பிய ஒரு ஆணும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக புகார் அளித்துள்ளார். பின்னர் போலீஸ் விசரணையில், பிரகாஷ் நகரில் வசித்து வரும் அந்த பெண்ணும், அந்த இளைஞரும் இரண்டு வருடங்களாக தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தப் பெண் பேசுகையில், தன்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழப்போவதாக முடிவெடுத்து விட்டதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், காதல் எந்த வயதிலும் வரலாம், அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். அவர் காதலரான 22 வயது இளைஞரை விசாரித்த போது, அந்த பெண் தன்னுடைய நம்பிக்கைக்குரிய காதல் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், இருவர் குடும்பத்தினரும் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, தங்களை சேர்ந்து வாழவிடவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் அந்த இளைஞரின் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போதும் கூட, அவர் தன்னுடைய 54 வயது காதலியைத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளார். இறுதியாக அவர்கள் இருவரையும் கைவிடுவதாக, இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…