கொரோனா தொற்றுக்கான பரிசோதனையில் நெகட்டிவ் என்று கூறி போலி அறிக்கை வழங்கிய சில நாட்களில் 57 வயதான நபர் இறந்ததை அடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த 57 வயதான வங்கி மேலாளர் சின்ஹா என்பவர் கொரோனாவுக்கான பரிசோதனை செய்துள்ளார். ஆனால் தனியார் நோயறிதல் பரிசோதனை மையத்தில் உள்ள ஊழியர்கள் கொரோனா இல்லை என்ற போலி அறிக்கையை வழங்கியதுடன், சின்ஹாவுடன் ரூ. 2,000 வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து, ஒரு சில நாட்களில் சின்ஹாவின் உடல் மோசமடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பின்னர், நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து சின்ஹாவின் மனைவி போலி பரிசோதனை மையத்தின் மீது புகார் அளித்ததை அடுத்து 3 பேரை கொல்கத்தாபோலீசார் கைது செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட பிஸ்வாஜித் மற்றும் இந்திரஜித் சிக்தர் ஆகியோர் சகோதரர்கள் என்றும், அவர்கள் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களாக பணிபுரிந்தவர்கள் என்றும், மற்றொருவர் அனித் பைரா ஒரு பிசியோதெரபி மையத்தை நடத்தி வருபவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…