பாதுகாப்பு துறைக்கு தேவையானவற்றை உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்காக 2021-022 பாதுகாப்பு பட்ஜெட்டில் 70,221 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி-1 ஆம் தேதி 2021-2022 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.அதில் பாதுகாப்பு அமைச்சகத்துக்காக சுமார் 4.78 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட 18.75% அதிகமாகும்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த ஒரு வெப்பினாரில் பேசினார்,அப்பொழுது அவர் கூறுகையில்.இந்திய அரசானது பாதுகாப்பது துறைக்கு தேவையான உபகரணங்களை உள்நாட்டிலே கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்,பாதுகாப்பு பட்ஜெட்டில் 1.35 லட்சம் கோடி மூலதன ஒதுக்கீட்டில் 63% தாவது சுமார், 70,221 கோடி முதலீடு செய்ய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது” என்று கூறினார்.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில் பாதுகாப்பு துறைக்கு தேவையான கொள்முதலை ஒழுங்குபடுத்துவதற்கான தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மூலதன கையகப்படுத்துதலின் காலக்கெடுவில் ஏற்படும் தாமதங்களை குறைக்க அமைச்சகம் செயல்பட்டு வருகிறது என்றார். “தற்போதுள்ள 3-4 ஆண்டுகளுக்கு சராசரியாக எடுக்கப்படுவதற்கு பதிலாக, பாதுகாப்பு கையகப்படுத்துதலை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க முயற்சிப்போம்,” என்று அவர் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இராணுவ நவீனமயமாக்கலுக்கு 130 பில்லியன் டாலர்களை செலவிட இந்தியா திட்டமிட்டுள்ளது.சமீபத்தில், ரூ.48000 கோடி மதிப்புள்ள 83 உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் வளர்ந்த எல்.சி.ஏ எம்.கே 1 ஏ க்கான ஆர்டர்கள் எச்.ஏ.எல் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட லைட் காம்பாட் ஹெலிகாப்டருக்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படலாம் என்று ராஜ்நாத் சிங்.
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…