புல்வாமா தாக்குதலில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி, தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு இன்னும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இந்த தாக்குதலில் யார் யார் ஈடுபட்டுபட்டது, தாக்குதலுக்கு எங்கு வாகனம் வாங்கப்பட்டது, வாகனத்தை யார் கொடுத்தார்கள், வெடிபொருட்கள் எங்கு வாங்கப்பட்டது, என பல கேள்விகள் எழுந்த நிலையில் இவற்றிக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பிலால் அகமது குச்சே என்பவர் கடந்த 5-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…