தலைநகர் டெல்லியில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 12 வயது சிறுவன் மற்றும் 11 வயது சிறுவன் இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்றைய சூழலில் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தினந்தோறும் எங்கோ ஒரு மூளையில், ஏதோ ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் டெல்லியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 8 வயது சிறுமி ஒருவர் திங்கட்கிழமை மாலை தனது நண்பர்களுடன் விளையாடுவதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தன்னுடன் விளையாட வருமாறு சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளான்.
அதன் பின் வீட்டிற்கு வந்த சிறுமி தனது பெற்றோரிடம், தனக்கு மிகவும் வயிறு வலிப்பதாக கூறி அழுதுள்ளார். குழந்தையை பரிசோதித்து பார்த்ததில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததை கண்டறிந்துள்ளன. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகள் சோதனை செய்த போலீசார் 12 வயது சிறுவன் மற்றும் 11 வயது சிறுவன் இருவரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமி உயிருக்கு போராடி வரும் நிலையில், சிறுவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…