VandeBharatExpress FlagsOff [File Image]
தமிழ்நாட்டில் புதியதாக தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
திருநெல்வேலி – சென்னை, விஜயவாடா – சென்னை உள்ளிட்ட 11 மாநிலங்களை இணைக்கும் வகையில், புதிதாக தயரான 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை, காணொலி காட்சி வாயிலாக பச்சை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். தற்போது, இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்தவும், ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்கவும் பெரிதளவில் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ரயில்கள் உதய்பூர்-ஜெய்ப்பூர், திருநெல்வேலி-சென்னை, ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை (ரேணிகுண்டா வழியாக), பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி, ராஞ்சி-ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய வழித்தடங்கள் இடையே இயக்கப்படும்.
நாட்டில் இதுவரை 25 வழி தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களால் நாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 34 ஆக உயரும். இந்த ஒன்பது ரயில்கள் ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய பதினொரு மாநிலங்களில் இணைப்பை பெறுகிறது.
இந்த வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கத்தின் வழித்தடங்களில் அதிவேக ரயிலாக இருக்கும் மற்றும் பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும். நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களின் இணைப்பை மேம்படுத்த ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் திருநெல்வேலி-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை முக்கிய மத நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கும்.
மேலும், விஜயவாடா – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில், ரேணிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்பட்டு, திருப்பதி யாத்திரை மையத்திற்கு இணைப்பை வழங்கும். இந்த வந்தே பாரத் ரயில்களின் அறிமுகம் நாட்டில் புதிய தரமான ரயில் சேவையை அறிவிக்கும்.
கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இந்த ரயில்கள், சாதாரண மக்கள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள், மாணவர் சமூகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நவீன, விரைவான மற்றும் வசதியான பயணத்தை வழங்கும்.
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…