கோவா மருத்துவமனையில் 1 மாத குழந்தையை திருடிய பெண்ணை போலீஸ் தேடி வருகின்றனர்.
கோவா மாநிலத்தின் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஒரு மாத குழந்தை கடத்தப்பட்டது, இதையடுத்து கோவா போலீஸ் மாநில அளவில் கடத்தல் காரர்களை தேடும் வேட்டையில் இறங்கியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் குழந்தையை கடத்திய பெண் ஒரு நபருடன் ஸ்கூட்டரில் ஏறி செல்வதை சி.சி.டி.வியில் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சி.சி.டி.வி காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்கிறோம் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் எச்சரிக்கப்பட்டுள்ளன, மேலும் அந்தப் பெண் குழந்தையுடன் தப்பிக்கும் சி.சி.டி.வி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் முற்றத்தில் உள்ள காபி கடைக்கு வெளியே குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குந்தையின் தாய் அந்த காபி கடையில் ஸ்னாக்ஸ் வாங்க வேறொரு பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்தபோது, அந்தப் பெண்ணும் குழந்தையும் எங்கும் காணப்படவில்லை என்பதைக் தாய் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடத்தல்காரர் முதலில் மருத்துவமையிலிருந்து வெளியேறி பின்னர் வட கோவாவின் மாபூசா நகரத்தில் ஒரு நபரின் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து கடத்தலின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்கூட்டரையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர் என்று செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கோவாவின் எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் நடந்த சம்பவத்தின் மூலம் கோவாவில் மருத்துவமனைகள் கூட பாதுகாப்பாக இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கோவாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய டிஜிபி யை கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…