Karnataka Congress [Image source : Twitter/@classic_mojito]
கர்நாடக புதிய முதல்வர் யார் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்து, அதில், புதிய முதல்வரை காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தை விட கூடுதலாக இடங்களை வென்று ஆட்சியமைக்க உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் ஆரம்பிக்கும் சமயத்திலேயே இரு பிரிவுகளாக இருந்த டி.கே.சிவகுமார் மற்றும சித்தராமையாவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒன்றாக சேர்த்து ஒரு சேர தேர்தல் பிரசாத்தை தொடர வைத்தார்.
முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்காமலேயே இந்த தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டது. தற்போது டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் அவர் தான் முதல்வராக வேண்டும் எனவும், சித்தராமையா ஆதரவாளர்கள் அவர் தான் முதல்வராக வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த முதல்வர் யார் என தேர்ந்தெடுக்க நேற்று பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், சுஷில் குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் ஆகிய முக்கிய காங்கிரஸ் தலைவர்களை பார்வையாளர்களாக காங்கிரஸ் தலைமை நியமித்து இருந்தது.
இந்த ஆலோசனை கூட்ட முடிவில், கர்நாடக மாநில புதிய முதல்வரை காங்கிரஸ் தேசிய தலைமை முடிவு செய்யும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அநேகமாக இன்று கர்நாடகவின் புதிய முதல்வர் யார் என்ற கேள்விக்கு காங்கிரஸ் பதில் கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…