RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

RCB - SRH

லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதுகின்றன. தற்போது மொத்தம் 12 ஆட்டங்களில் பெங்களூர் 8 வெற்றி பெற்று 17 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஹைதராபாத் 4 வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் ஹைதராபாத்  அணி பேட்டிங் செய்ய போகிறது. இன்றைய போட்டியில் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். ரஜத் படிதார் இம்பெட் பிளேயராக பேட்டிங்கில் களமிறங்கவுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:

கேப்டன் ரஜிதேஷ் சர்மா தலைமையிலான அணியில், பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், லுங்கி என்கிடி, சுயாஷ் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், எஷான் மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுவரை ஆர்சிபி 12 போட்டிகளில் விளையாடி, 8-ல் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பெங்களூரு அணி முதல் இடத்திற்கு முன்னேற தீவிரம் காட்டும். அதே நேரத்தில் பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட ஹைதராபாத்  ஆறுதல் வெற்றிக்காக போராடும். இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால், பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம்.

ஐபிஎல்லில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப் போட்டிக்குள் நுழைய இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். அந்த அணிகள் குவாலிஃபையர்-1ல் தோற்றாலும் குவாலிஃபையர்-2ல் விளையாட வாய்ப்பு கிடைக்கும். நடப்பு ஐபிஎல் சீசனில், பிளேஆஃப்களுக்கு நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனால், முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கு அவற்றுக்கிடையே போட்டி நிலவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்