SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!

இஷான் கிஷனின் அற்புதமான பேட்டிங் செய்ததால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஆர்சிபி அணிக்கு 232 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad

லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக இஷான் கிஷான் அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்து அசத்தினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவருக்கும் இடையே 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது.

அபிஷேக் 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், டிராவிஸ் ஹெட் 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹென்ரிச் கிளாசன் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிகேத் வர்மா 9 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

நிதிஷ் ரெட்டி 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார். அபினவ் மனோகர் 11 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகினார். கடைசியில், இஷான் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

மேலும், பேட் கம்மின்ஸ் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பினர். இறுதியில், சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்தது. இப்பொழுது, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய போகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்